நாடு முழுவதும் அரசியல்வாதிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் வருகின்ற 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு ஊசி அனைவருக்கும் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களிடம் நம்பிக்கை ஏற்பட அரசியல்வாதிகளுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி, தடுப்பூசி போட அமைச்சர்கள் முந்த கூடாது என்றும், தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் காத்திருக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.