மத்திய அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசிய அவர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு சமையல் எரிவாயு இணைப்புகள் மக்களுக்கு எளிதாக கிடைப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலமாக விரைவில் மக்களுக்கு சூரிய ஒளி அடுப்புகள் வருவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் கூறினார். முன்னதாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகளையும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாய் இணைப்புகளையும் அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.