Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு?… தீவிர ஆலோசனை…!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடைத்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ராஜஸ்தான், அசாம், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநில அரசுகள் குறைத்துள்ளன. அதனால் அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதுமட்டுமன்றி அனைத்து கட்சிகளும் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்வதாக அறிவித்து வருகிறார்கள். அதன்படி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விலையை குறைக்க ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வந்து, அதிகபட்ச வரியாக 28% விதித்தாலும் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றும், இந்த இழப்பை எப்படி எதிர்கொள்வது என ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |