தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை மகாகவி பாரதியாருக்கே சேரும். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கற்று தேர்ந்தவர். அதேசமயம் தமிழ் மொழிகளில் பல காவியங்களை படைத்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் மற்றும் கவிதைகள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்துகின்றது. தன்னுடைய பாடல்களால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். இவரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக கொண்டாடுவதற்கு பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி மாணவர்களிடையே மொழி நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரிகளில் பேச்சு, கட்டுரை மற்றும் கேளிக்கை போன்ற சுவாரசியமான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என யுஜிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சில போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.