Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் ஒரே நாடு, ஒரே உரம்…. பிரதமர் மோடி அதிரடி…..!!!

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமரின் கிசான் சம்மன் சம்மேலம் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை காலை தொடங்கி வைக்க உள்ளார். நாடு முழுவதும் சுமார் 13,500 விவசாயிகளும், 1700 வேளாண் தொழில் நிறுவனத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றன.இந்த நிகழ்ச்சியில் பாரதம் என்ற ஒரே பெயரில் உரங்களை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக ஒரே நாடு மற்றும் ஒரே உரம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்.

பாரத யூரியா பைகளையும் பிரதமர் அறிமுகம் செய்ய உள்ளார்.மேலும் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 விவசாயிகள் உதவி மையங்களையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |