Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமல்… இனிமே இது கட்டாயம்…!!!

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டர் கட்டாயம் என்பது அமலுக்கு வந்தது.

சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் நிற்காமல் பாஸ்டேக் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.

இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றால் சுங்கச்சாவடிகளில் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.பிப்ரவரி 16ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியது.

அதன்படி நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்பது நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. பாஸ்ட் டேக்குக்கு மாறுவதற்கான அவகாசம் நள்ளிரவுடன் முடிவடைவதால் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு வசூல் செய்யப்படுகிறது.

Categories

Tech |