உள்நாட்டு விமான பயண டிக்கெட் கட்டணங்களுக்கான வரம்பு 10% முதல் 30% வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உள்நாட்டு விமான பயண டிக்கெட் கட்டணங்களுக்கான வரம்பை 10% முதல் 30% வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி உடனடியாக அமலுக்கு வரும் கட்டண உயர்வு, மார்ச் 31ஆம் தேதி வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் விமான கட்டணம் 200 ரூபாயிலிருந்து 5,600 வரை அதிகரித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.