Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் இனி…. தானியங்கி கட்டண வசூல்…. மத்திய அரசு புதிய திட்டம்….!!!

இந்தியாவில் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச்சாலைகளை அமைப்பதற்கும், அதனை பராமரிப்பதற்கும் ஆகும் செலவுக்கான கட்டணம் வரியாக அச்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் சுங்கச்சாவடி கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி வாகன பதிவு எண் அங்கீகார முறையில் தாமாக சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் செல்ல முடியும். மேலும் நெடுஞ்சாலையில் பயன்பாட்டின் அடிப்படையில் அதாவது செல்லவிருக்கும் தொலைவின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |