Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சந்தோஷமான அறிவிப்பு – இன்று முதல் அமல்

பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் சிதைந்து போய் உள்ளது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் ஒரு பகுதியாக ஏழை மக்கள் பயன்பெறும் தங்க நகை கடனில் தங்க நகைகளின் மதிப்பில் இனி 90% வரையில் கடன் பெறவும் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த சலுகையை 2021 மார்ச் 31 வரை அமலில் இருக்கும். சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களை மறுசீரமைப்பு செய்ய வங்கிகள் அனுமதிக்கவேண்டும். வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |