நாடு முழுவதும் கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் இரங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானிய குழு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இணைய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருதி அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த பாடத்திட்டம் ஆனது அதிக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ள நிலையில் இந்த புதிய பாடத்திட்டம் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர்க்கப்பட உள்ளது.