Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டாயம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு …!!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவையை பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

நாடு முழுவதிலும் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது சார்பாக தொலைத்தொடர்பு துறை அனைத்து அமைச்சர்களுக்கும் உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள் போன்றவை இணையதள இணைப்பு-பிராட்பேண்ட், தரைவழி இணைப்பு தொலைபேசி போன்றவற்றிற்கு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய சேவையை பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மிகப் பெரிய நஷ்டத்தில் சிக்கியுள்ள எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மத்திய அரசின் நடவடிக்கை ஆறுதல் அளிப்பதாக உள்ளது

Categories

Tech |