Categories
Uncategorized

நாடு முழுவதும் கட்டாயம்- வாகன ஓட்டிகளே உஷார்…!!

வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் அவசியமானதென காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.

வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் அவசியமாகிறது என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்து ஐ ஆர் டி ஏ ஐ வெளியிட்ட அறிக்கையில் வாகனத்தின் உரிமையாளர் வாகன காப்பீட்டை புதுப்பிக்கும்போது மாசுகட்டுப்பாட்டு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழை பெற்றுக் கொண்ட பிறகே பாலிசியை புதிதாக கொடுக்கவும் மற்றும் புதுப்பிக்கவும்  வேண்டுமென காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 

உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாவிட்டால் காப்பீட்டு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் செய்யக்கூடாது என உத்தரவிட்டது. எனினும் உச்ச நீதிமன்றத்தின் அவ்வித உத்தரவை காப்பீட்டு நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்கவில்லை. அதன் விளைவாகவே தற்போது காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இதன்மூலம் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வாகனங்கள் வெளியேற்றும் புகை தர மதிப்பீட்டிற்கு ஏற்ப இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து இந்தச் சான்றிதழ் ஆனது வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Categories

Tech |