Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும் ஒரே வருடத்தில்…. 126 புலிகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் புலிகள் காப்பகம் அல்லாத பகுதியில் 61 புலிகளும், புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு உள்ளே 65 புலிகளும் உயிரிழந்துள்ளது. மேலும் உயிரிழந்துள்ள மொத்த புலிகளில் 44 புலிகள் இளம்வயது புலிகள் ஆகும். உயிரிழந்த 35 புலிகள் இளம்வயது பெண் புலிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை 1 வருடத்தில் 4 புலிகள் உயிரிழந்துள்ளது என தேசிய புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்தின் சான்றாகவும் ஒரு காடு செழிப்பாக உள்ளது என வன விலங்கு கணக்கெடுப்பின்போது, புலிகளை கண்டால் மட்டுமே அதிகாரிகள் உறுதி செய்வார்கள். அப்படி உள்ள சூழலில் இளம் வயது பெண்புலிகள் அதிகம் உயிரிழந்துள்ளது ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |