இந்தியாவில் அரசு நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது 6699 அதிகாரிகள் இருக்க வேண்டிய இடத்தில் 5205 ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதற்கு தேர்வு முறையை தான் என்று முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி வருகிறது. இதில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்று 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தேர்வை ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் எழுதி வருகின்றனர். ஆனால் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
தற்போது ஆண்டுக்கு 180 ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே ஆட்சிப் பணிக்கு வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகிறது. இதற்கு தேர்வு முறை மிகவும் கடினமாக இருக்கிறது என்று காரணமாக கூறப்படுகிறது. இந்தத் தேர்விற்கு பிறகு நேர்காணல் தேர்வு சந்திக்க வேண்டும். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றாரல் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் 2030ஆம் ஆண்டு வரை ஐஏஎஸ் அதிகாரிகள் பணி நியமனம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பதற்கு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த குழு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான