நாடு முழுவதும் கல்லூரிகளில் ராக்கிங் செய்யும் மன நிலையில் சில மாணவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு ராக்கிங் செய்யும் மனநிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து உளவியல் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ராக்கிங் சம்பவங்கள் மற்றும் அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர் சேர்க்கை கையேடுகளில் தவறாமல் குறிப்பிட வேண்டும். ராகிங் தடுப்பு குழு, தடுப்பு படை ஆகியவற்றை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தெரிவித்துள்ளது.