நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுதல் அறிவிக்கப்பட்ட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா நிலைமை குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியது, எந்த நிலையிலும் தடுப்பூசிகளை வீணாகாமல் பார்த்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஒரு தீவிர இயக்கம் போல் நடத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீடுதோறும் சென்று தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் போது முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், சிறைகள், கல்லூரிகள் மற்றும் செங்கல்சூளைகள் ஆகிய அனைத்து இடங்களுக்கும் சென்று முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு போடுவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி மையங்களில் 18 முதல் 59 வயதுவரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதே ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.