நாடு முழுவதும் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு வேலை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பணிகள் நடைபெறவில்லை.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக கடந்த சில மாதங்களாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பானின் கடனுதவி பெற உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதனால்தான் மற்ற இடங்களில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்க தமிழகத்தில் மட்டும் வெளிநாட்டு பலனை எதிர்பார்த்து வெறும் பெயர் பலகையுடன் காத்திருக்கிறோம்.