நாடு முழுவதும் விமான நிலையங்களில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்,நாடு முழுவதும் விமான நிலையங்களில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உள்ளூர் போலீசாரின் உதவியை நாடலாம். மேலும் குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.