மத்தியில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையில் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு புதிய கொள்கைகளை வகுத்து வருகிறது. பொதுத்துறையின் ஆனாலும் சரி, தனியார்துறை ஆனாலும் சரி நாடு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி மக்களுக்கு ஏற்றவாறு, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு விதமான மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. இது அரசு எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது வருகிறது.
அந்தவகையில் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக விரைவில் புதிய கொள்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ள மத்திய நிதி அமைச்சர் , 4 பொதுத்துறை நிறுவனங்கள் இடம் பெறும், பிற துறைகளில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.