சாலை விபத்துக்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வாகனத்தை 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக் கூடாது. இந்த விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும்.