Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இந்த Apps-க்கு தடை…… மத்திய அரசு அதிரடி….!!!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விளம்பரங்களும் சமூக வலைதளங்கலில் பரப்பப்படுகிறது. மேலும் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை புகைப்படங்களையும் whatsapp குழுக்களில் வெளியிடுகிறது. செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தவறாக பேசுவது மிரட்டல் விடுவது போன்ற செல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடன் செயலின் மூலமாக கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உயர்மட்ட ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், “ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் கடன் செயலிகள் மட்டுமே இனி செயல்பட முடியும். ரிசர்வ் வங்கி அனுமதி பெறாத 600க்கும் மேற்பட்ட செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய ஐடி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்” என கூறியுள்ளார்.

Categories

Tech |