Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும்…. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்…. உறுதி அளித்த மத்திய அமைச்சர்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் 5 ஜி இணைய வேகத்தை அடைந்துள்ள நிலையில் நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமங்களில் தற்போது வரை 4ஜி சேவைக்கான தேடல் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் 13 முக்கிய நகரங்களில் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளும் 5ஜி  சேவை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம்,நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் ஃபோர் ஜி சேவை பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மத்திய அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் எல்லை பகுதிகளிலும் 4G சேவை மூலம் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |