ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளின் மூலமாக மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரேஷன் பொருட்களை தகுதியான நபர்கள் பெரும் வகையில் “ஒரே நாடு ஒரே ரேஷன்” எனும் திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் கைரேகை பதிவு செய்யப்பட்ட பின்னரே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன் காரணமாக உரிய நபர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப்படுகிறது. அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூர் வெளி மாநிலத்திற்கு செல்லும்போது கைரேகைகளை பதிவு செய்வதன் மூலமாக உணவுப் பொருட்களை பெற முடிகிறது.
மேலும் ரேஷன் கடைகளில் ஏற்படும் பல்வேறு முறை கேடுகள் தவிர்க்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் பொருட்கள் பெற தகுதி உள்ள நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தர நிலைகளில் புதிய மாற்றங்களை கொண்டுவர உள்ளது. இந்திய நாட்டில் 80 கோடி மக்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர் என உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தரநிலைகளில் முழுவதுமாக வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்படும். இதனால் மோசடிகளும் ,முறைகேடுகளும் ஏற்படுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.