Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி…! காணாமல் போன விவசாயிகள்…. திடீர் பரபரப்பு …!!

டெல்லி டிராக்டர் பேரணிக்கு பின் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வரும் விவசாயிகள் கடந்த 26ம் தேதி செங்கோட்டையை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் வன்முறை முண்டது.  இப்பேரணி மற்றும் வன்முறை சம்பவத்திறக்கு பின்  போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாயமானோர்  விவரங்களை இந்த குழுவினர் சேகரித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என்றும் சம்யுக்தா கிஷான் மோஜா அமைப்பு கூறியுள்ளது. மேலும் மாயமானவர்கள் பற்றிய தகவல் அறிந்தால் தெரிவிப்பதற்கு பிரத்யேக செல்போன் எண்ணையும்  அவர்கள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |