Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி – பதற வைக்கும் வைரல் வீடியோ …!!

டெல்லியில் கடந்த இரு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஏற்கனவே அறிவித்தபடி குடியரசு தினத்தை ஒட்டி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது நடந்த வன்முறையில் அரசு சொத்துக்கள், போலீஸ் வாகனம், பேருந்து சூறையாடப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை விரட்டியடித்தனர். டெல்லியில் போராடும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் தங்களுக்கும், இந்த வன்முறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் கூட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து வன்முறைகளை நிகழ்த்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். அமைதி வழியில் போராட்டம் நடத்துவது தான் தங்களின் நோக்கம் என்றும், அதனை சீர்குலைக்கும் வகையில் சமூக விரோத கும்பல் நுழைந்து வன்முறைகளை நிகழ்த்தி விட்டதாகவும் விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்போது நாடு முழுவதும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லியில் செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது பாதுகாப்பிற்கு இருந்த போலீஸ் வன்முறையில் ஈடுபடும் கும்பலில் இருந்து தற்காத்து கொள்வது பலரையும் வேதனை அடையவைத்துள்ளது. இப்படியான செயலை யார் செய்தாலும் ஏற்க முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |