Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி…. சமளிக்குமா மத்திய அரசு ? புலம்பும் மக்கள் …!!

நாட்டின் பொருளாதாரம் 12.5 சதவீதமாக சுருங்கிக் கொண்டிருப்பதாகவும், 5 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்றும் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணரும், இந்தியாவின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவருமான புரோனாப் சென் எச்சரித்துள்ளார்.

‘தி வயர்’ இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியுள்ளது. அதைப் பற்றி கேள்வியே எழவில்லை. எதுவும் நன்றாக இல்லை என்பதுதான் என் மதீப்பீடு. முதல் காலாண்டில் 32 சதவீதமாக சுருங்கிய பொருளாதாரம், இந்த ஆண்டு இறுதியில் 12.5 சதவீதமாக சுருங்கிவிடும். மேலும் வேலையில்லா திண்டாட்டம் 11 சதவீதத்தை அடைந்து, 5 கோடி பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படும்” என்று தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சென், ”புதிய திட்டங்களை முடக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எதிர்வினையாற்றிவிடும் என்றும், இப்போதைய மோசமான நிலையையும் அது மேலும் மோசமாக்கிவிடும் என்றும் குறிப்பிட்டார். இந்த விசயத்தில் அரசு காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு என்ற ரீதியில் அமைதி காப்பது தவறான வழி” என்றும் அவர்  சுட்டிக்காட்டினார்.

புரோனாப் சென்  கருத்துகள் சற்று அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளன. கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்திலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார மேதைகள் கூறிய ஆலோசனைகள் அனைத்தையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

ஊரடங்குக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகி, மத்திய அரசின் கையை மீறி போய்விட்டதையே பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளான சீனா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், இந்தியா மட்டும் கிணற்றில் போட்ட கல்லாக அமைதியாக இருப்பது நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Categories

Tech |