Categories
உலக செய்திகள்

நாடு நாடாக ஓடிய ராஜபக்சே…. மீண்டும் நாடு திரும்பினார்…. உச்சகட்ட பரபரப்பில் இலங்கை….!!….!!

இலங்கையை விட்டு தப்பிச்சென்ற ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே எனக்கு ஊறி அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9 தேதி தீவிரமடைந்த நிலையில் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்து அதனை தன் வசம் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் அங்கிருந்து மாலைதீவுக்கு தப்பி ஓடிவிட்டார். அதன் பின் அவர் தனது அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்றார். இந்நிலையில் சுமார் இரண்டு மாதங்கள் கழித்து ராஜபக்சே தனது குடும்பத்துடன் இலங்கை திரும்பி உள்ளார்.

இலங்கையின் பண்டார நாயக்கர் சர்வதேச விமான நிலையத்திற்கு போத்தபய ராஜபக்சே இன்று அதிகாலை தாய்லாந்தில் இருந்து வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை வந்தடைந்த கோத்தபய ராஜபக்சேவை ஆளுங்கட்சி எம்பிக்களும் மந்திரிகளும் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றுள்ளனர். அதன் பின் அவர் கொழும்புவில் உள்ள விஜிர்மா மாவதா பங்களாவில் தங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |