நேற்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அடுத்தகட்டமாக இன்று இரண்டாம் நாள் கூட்டம் கூடியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மக்களவை நடவடிக்கையை ஒத்திவைத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை குறித்து விவாதிக்க வேண்டும்.
ஏனென்றால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டிய பணிக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கிறது. அதாவது மாநில அரசு நிறைவேற்றியுள்ள நீட்விலக்கு மசோதா, ஆன்லைன் விளையாட்டுக்கு தடை மசோதா உள்ளிட்ட 22 மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கின்றார். அதனால் இந்த அவையில் ஆளுநரின் பணி மற்றும் பொறுப்புகள் பற்றி விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.