Categories
உலக செய்திகள்

“நாஜி படையில் பணியாற்றிய 101 வயது முதியவர்”…3,518 பேரை கொலை செய்ய உதவி…. ஜெர்மனி கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!

இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு  அருகே வதை முகாம் அமைத்து 2 லட்சத்திற்கும் அதிகமான கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். அவர்களில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் பட்டினி, நோய், கட்டாய உழைப்பு மற்றும் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்னும்  ஆயிரக்கணக்கான துப்பாக்கி சூடு, தூக்கில் போடுதல் மற்றும் விஷ வாயுவை சுவாசிக்க வைத்தால் போன்ற தண்டனைகள் மூலமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாஜி கால குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொண்டு வரும் தற்போதைய ஜெர்மனி அரசு நாஜி வதை  முகாமில் காவலராக பணியாற்றிய 101 வயது முதியவருக்கு எதிராக கடந்த வருடம் விசாரணையை தொடங்கியுள்ளது. அந்த முதியவர் 3,518 பேரின் கொலை செய்ய உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை எதிர்கொண்டு வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் பெயர் விவரங்கள் வெளியிடப்படாத அந்த முதியவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதித்து ஜெர்மனி கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |