Categories
உலக செய்திகள்

நாஜி ஆட்சியில் நடந்த கொலைகள்… 75 வருடங்களுக்கு பிறகு முதியவர்க்கு கிடைத்த தண்டனை…!!

யூத சிறை கைதிகளை கொல்வதற்கு உதவியதாக கூறி முதியவர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இரண்டாம் உலகப்போரில் 1944 லிருந்து 1945 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் போலந்தின் ஸ்டான்ஸக் சிறையில் காவலராக பணிபுரிந்தவர் புருனோ. அப்போதைய காலகட்டத்தில் யூதர்கள் உட்பட 65 ஆயிரம் சிறைக் கைதிகள் ஸ்டான்ஸக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேலானோர் சிறையில் கொல்லப்பட்டனர். இதில் பலர் தலையில் சுடப்பட்டும்  விஷவாயு பரப்பியும் துடிக்கத்துடிக்க கொல்லப்பட்டுள்ளனர். அந்த சிறையில் அப்போது 18 வயது புருனோ அங்கு காவலராக பணிபுரிந்தார். அப்போதும் 5232 பேர் கொல்லப்பட்டதற்கு இவர் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. தண்டனை பெற்ற புரூனோக்கு  இப்போது 93 வயது ஆகிறது. இது  குறித்து பேசிய புரூனோ, ” உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இத்தனை ஆண்டுகாலம் அனுபவித்து வந்த மன உளைச்சலுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது குறித்து இதுவரை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |