Categories
உலக செய்திகள்

நாசாவின் நிலவு பயணத் திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக அமித் பாண்டே தேர்வு… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

கடந்த 1969 ஆம் வருடம் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு முதன்முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்துள்ளது. அதன் பின் தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

இந்த திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக இந்தியாவைச் சேர்ந்த அமித் பாண்டே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹெல்த்வானி நகரில் பிறந்த அமித் பாண்டே அங்குள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் படித்து அதன் பின் வாரணாசி ஐஐடியில் பி.டெக்  பட்டம் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அரிசேனா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் பல வருடங்களாக அமெரிக்காவில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வரும் அமீர் பாண்டே மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக கல்வி, வேலை வாய்ப்பு குறித்த ஆலோசனைகளை இலவசமாக தெரிவித்து வருகின்றார். தற்போது நாசாவின் நிலவு பயணத் திட்டத்தில் மூத்த விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமித் பாண்டேவுக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |