Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நாங்க டிக்கெட் வாங்கி தரோம்” தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

பயணிகளிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்த குற்றத்திற்காக வடமாநில கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் புடன்பகுடி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பணிக்காக சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் தங்கியுள்ளார். கடந்த 28-ஆம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக புடன்பகுடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் டிக்கெட் கவுண்டருக்கு அருகிலேயே புடன்பகுடி சோகமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற 6 பேர் நாங்கள் டிக்கெட் எடுத்து தருகிறோம் எனக் கூறி அவரை ஆட்டோவில் அழைத்து சென்று செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாயை பறித்தனர்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புடன்பகுடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து பீகார் மாநிலத்தை சேர்ந்த மோஹித்குமார், ராஜேஷ்குமார், சுஷில்குமார், அமன்குமார், ரபிகுமார், சாஞ்சி மஹ்தோர் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பயணிகளிடம் இருந்து செல்போன் திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 19 செல்போன் மற்றும் 6,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |