Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க ஒன்னும் ஆடு, மாடு கிடையாது?”.… தயவு செஞ்சு மெகா ஏலத்த நடத்தாதீங்க…. கொந்தளித்த சிஎஸ்கே வீரர்….!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் இனி மெகா ஏலத்தை நடத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரில் கடந்த 12 ,13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 15 வது சீசனுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 590 வீரர்களில் 204 வீரர்கள் மட்டுமே வாங்கப்பட்டன. இவர்களை வாங்குவதற்கு 551 கோடிகளை 10 அணிகளும் சேர்ந்து கொடுத்தது. இதனை தொடர்ந்து இந்த மெகா ஏலத்தில் இந்தியாவின் இஷான் கிஷன் அதிக தொகைக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்நிலையில் ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய முக்கியமான வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் ஏலம் போகவில்லை.

ஆனால் கடந்த சில சீசன்களுக்கு முன் பல கோடி கொடுத்து இவர்களை அணிகள் தக்கவைத்து இருப்பினும், ஒரு சில சீசன்களில் சொதப்பியதற்காக இவர்களை எந்த அணியும் வாங்கவில்லை. எனவே இந்த மெகா ஏலத்தை பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பா கடுமையாக விமர்சித்து ஒரு காணொளியை வெளியிட்டு உள்ளார். அதன்படி தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருப்பது போன்ற உணர்வை இந்த மெகா ஏலம் தருகிறது.

மேலும் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் திறமையானவராகவும்  மற்றும் ஏலம் போகாதவர் திறமையற்றவர் எனவும் ஒரு தோற்றம் ஏற்படுகிறது. மேலும் பேசிய அவர், மெகா ஏலத்தை இனி நடத்த கூடாது என்பது எனது கருத்து. இந்த ஏலம் ஒரு கால்நடையை போல், எங்களை ஏலம் விடுவது பிடிக்கவில்லை என்று கூறினார்.

எனவே இந்த ஏல முறையை கைவிட்டு டிராஃப்ட் முறையையே கொண்டு வர வேண்டும் என்றும் அதுதான் வீரர்களுக்கு மரியாதையாக இருக்கும். எனவே  ஐபிஎல் நிர்வாகம் இதனை குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் ஒருவரது திறமையை அவரது விளையாட்டின் மூலம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் எவ்வளவு தொகைக்கு வாங்கபட்டார் என்பதை வைத்து திறமையானவரா? இல்லையா? என்பதை கணிக்கக் கூடாது. இது வீரர்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |