பிரபல நாட்டில் சீனா 2 ரகசிய காவல் நிலையங்களை வைத்துள்ளது
ஜெர்மனி நாட்டில் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான 2 ரகசிய காவல் நிலையங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “எங்கள் நாட்டின் தலைநகரில் இந்த காவல் நிலையம் அமைந்துள்ளது. சீனா இந்த காவல் நிலையங்களை அங்கீகாரமற்ற முறையில் தகவல்களை சேகரிக்க பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் கேள்விக்குரிய இந்த காவல் நிலையங்கள் சீன புலம்பெயர்ந்த நபர்களால் நடத்தப்படுகிறது.
ஆனால் ஜெர்மன் குடிமக்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கலாம். இந்நிலையில் தகவல் சேகரிப்பு, பிரச்சாரத்தை பரப்புதல், மக்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை இந்த காவல் நிலையத்தின் முக்கிய நோக்கம். மேலும் இது குறித்து ஜெர்மன் அரசு சீன தூதரகத்துடன் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.