Categories
சினிமா தமிழ் சினிமா

‘நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம்’… நடிகர் அருண் அலெக்சாண்டர் மறைவு… பிக்பாஸ் பிரபலம் கவின் ட்விட்டரில் உருக்கம்…!!!

பிக்பாஸ் பிரபலம் கவின் நடிகர் அருண் அலெக்சாண்டர் மறைவு குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகராக வலம் வருபவர் அருண் அலெக்சாண்டர் . கடந்த 10 ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக இருந்து வந்த இவர் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் . இவர் லோகேஷ் கனகராஜின் மாநகரம் , நெல்சன் திலீப் குமாரின் கோலமாவு கோகிலா மற்றும் கார்த்தியின் கைதி ,விஜயின் பிகில் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் நடிகர் அருண் அலெக்சாண்டர் நடித்துள்ளார் .

நேற்று உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அருண் அலெக்சாண்டர் மரணமடைந்தார் .இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் அருண் அலெக்சாண்டருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார் . அதில் ‘சில நேரங்களில் வாழ்க்கை ஏன் இவ்வளவு கொடூரமானதாக இருக்கிறது . இந்தப் புகைப்படத்தை உங்கள் மறைவுக்கு பதிவிடுவேன் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நீங்கள் ஒரு நல்ல மனிதர் நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம்’ என்று பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |