Categories
உலக செய்திகள்

நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம்…. ரஷியாவிற்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

ரஷியாவிற்கு எதிராக 107 நாடுகள் வாக்களித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை  தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி உக்ரைனின்  4 முக்கிய பிராந்தியங்களை  கைப்பற்றியது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்கு பிராந்தியங்களையும்  தங்களுடன்  இணைத்துக்கொள்ள போகிறோம் என ரஷிய அதிபர் புதிய அறிவித்தார். அதேபோல் இந்த பிராந்தியங்களை இனைப்பதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெற்றதாக கூறி 4  பிராந்தியங்களையும் ரஷியா தன்னுடன் நினைத்துக் கொண்டது. ரஷியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என  உலக நாடுகள் கண்டித்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின்  பிராந்தியங்களை ரஷியா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவர  திட்டமிட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த நிலையில்  தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ரஷிய ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ரஷியாவின் இந்த கோரிக்கையை ஏற்பதா? வேண்டாமா என ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியா உள்ளிட்ட 107 நாடுகள் ஐ.நா. உறுப்பினர்கள் ரஷியாவிற்கு எதிராக வாக்களித்துள்ளது.

Categories

Tech |