BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.499 புது பிராட்பேண்ட் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஜியோபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றுக்குப் போட்டியாக BSNL நெட்வொர்க்கிலும் தடை இல்லா இன்டர்நெட் சேவைக்கான பிளான்கள் இருக்கிறது. அந்த அடிப்படையில் BSNL நெட்வொர்க்கில் புதியதாக ரூ499-க்கு ஒரு பிளான் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதே நேரம் இதே ரூ499க்கு ஒரு பிளான் ஏற்கெனவே இருக்கிறது. தற்போது அதே பிளானை பெயர்மாற்றம் செய்து புது பிளான் என BSNL அறிவித்திருக்கிறது.
BSNL வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 பிராட் பேண்ட் திட்டத்தை வழங்குவது இது முதல் முறையல்ல. ரூபாய்.499 திட்டம் 40 Mbps இணைய வேகத்துடன் 3300 GP டேட்டா வரை FUP டேட்டாவுடன் அன்லிமிடெட் காலிங்வுடன் வழங்குகிறது. FUP தரவைப் பயன்படுத்தியபின், அதன் ஸ்பீட் 4 Mbps ஆகக் குறைக்கப்படுகிறது. இந்த பிளானை பெற செக்யூரிட்டி டெப்பாசிட் ஆக ரூ.500 செலுத்த வேண்டும்.
பைபர் அடிப்படை NEO பிராட்பேண்ட் திட்டம் ரூபாய்.449ன் நன்மைகள் முன்புபோன்றே இருக்கிறது. பயனாளர்கள் 3300GP டேட்டா வரை மாதாந்திர FUP டேட்டாவுடன் 30 Mbps இணைய வேகத்தைப் பெறுகின்றனர் மற்றும் FUP டேட்டா நுகர்வுக்குப் பின் வேகம் 4 Mbps ஆகக் குறையும். இந்த பிளானை பெற செக்யூரிட்டி டெப்பாசிட்டாக ரூ.500 செலுத்தவேண்டும். இதனிடையில் BSNL விரைவில் ரூபாய்.775 மற்றும் ரூ.275 பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்தப் (நவம்பர் 15, 2022) போகிறது.