நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி மன்றத் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
நாகையில் நடந்துவரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஏடிஎம் மகளிர் கல்லூரி சாலையில் சிறிய பாலத்துடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார்கள். இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். இந்த ஆய்வில் நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் என பலர் இருந்தனர்.