Categories
அரசியல் மாநில செய்திகள்

நாகூசும் ஆ.ராசாவின் பேச்சு…! நீங்க வாய் திறக்காமல் இருப்பது ஏன்….? ரொம்ப கஷ்டமா இருக்கு….. OPS…!!!

சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. ராசா பேசியிருந்தார். இவரின் கருத்தை அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆ ராசாவின் இந்த கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்த விவகாரம் தற்போது ஹாட் டாபிக்காகவே உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், ஆ.ராசா பேசியது குறித்து தமிழக முதல்வர் வாய் திறக்காமல் இருப்பது திமுக இதை ஊக்குவிக்கிறதோ? என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது.

மேலும் அமைச்சர் சேகர்பாபுவிடம் இதுகுறித்து கேள்வி கேட்டபோது எந்தவித கருத்தும் கூறாமல் சென்றது வியப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் யார் எந்த மதத்தையும் இழிவு படுத்தி பேசினாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் இயக்கமாகவும், அதனை கண்டிக்கும் இயக்கமாகவும் அதிமுக விளங்கும். அந்த வகையில் ஆ. ராசா பேசியிருக்கும் கருத்துக்கு கண்டிக்காத திமுகவிற்கு அதிமுக சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மதத்திற்கு எதிராக சர்ச்சையான பேச்சுக்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |