Categories
இந்திய சினிமா சினிமா

நாகர்ஜுனா வீட்டில் கொண்டாட்டம்…. இதுதான் காரணமா….? வெளியான தகவல்….!!

பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகார்ஜுனாவின் வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வு ஒன்றை கொண்டாடியுள்ளனர். அதாவது நாகார்ஜுனாவின் இரண்டாவது மகன் அகில் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்த மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் தெலுங்கு படம் தசராவை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது.

இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் 24 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நாக சைதன்யா சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த லவ் ஸ்டோரி திரைப்படம் ஒரே நாளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் தனது மகன்கள் அடுத்தடுத்து வெற்றிகளை குவிப்பது நாகர்ஜுனாவிற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த இரண்டு மகிழ்ச்சியையும் குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |