நாகர்கோவிலில் கோர்ட் பேருந்து நிறுத்தம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என மாநகராட்சி மேயர் மகேஷ் கூறியுள்ளார்.
நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேப்பமூடு பகுதியில் இருக்கும் மாவட்ட கோர்ட்டை ஆய்வு செய்த பின் கூறியுள்ளதாவது, நாகர்கோவில் மாநகராட்சியை முதன்மை மாநகராட்சியாக மாற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் கொண்டுவரப்பட உள்ள நிலையில் வேப்பமூடு பூங்காவிலிருந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை செல்லும் கோர்ட் சாலையை பராமரிக்கும் பணிக்காக ரூபாய் 2 கோடி நிதி வர உள்ளது.
கோர்ட் பேருந்து நிறுத்தத்தை விரிவுபடுத்துவது குறித்து நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு இது தொடர்பான வடிவமைப்பு கட்டமைப்பு அறிக்கை ஒன்றை நீதிபதிக்கு கொடுத்து அவர்கள் அதை ஆய்வு செய்து கோர்ட்டுக்கு அனுப்பி வைத்த பின் கோட்டிலிருந்து கட்டமைப்பு அறிக்கை வரும். இதையடுத்து கோர்ட் பேருந்து நிறுத்தம் விரிவாக்கம் செய்யப்படும். மேலும் நாகர்கோவில் கோர்ட்டில் மக்களுக்கான கட்டண கழிப்பறை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.