நாகர்கோவிலில் மாதாந்திர குற்றதடுப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நேற்று மாதாந்திர குற்றதடுப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது, “கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை புழக்கம் மாவட்டத்தில் முழுவதுமாக இல்லாதவரை கண்காணிக்க வேண்டும். கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் நபர்கள் வங்கி கணக்குகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட வேண்டும்.
ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்கக்கூடாது. போக்சோ சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு பெற்று தர வேண்டும். கந்துவட்டி தொடர்பான வழக்குகளில் உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் சைபர் மோசடிகளில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விநாயக சதுர்த்திக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.