கிரெடிட் கார்டு விதிமுறைகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புதிய மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. புதிய கட்டணங்கள் நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும். அதனால் நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணங்கள் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அன்பு வாடிக்கையாளர் உங்கள் கிரெடிட் கார்டு கட்டணங்கள் 15 நவம்பர் 2022 முதல் மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. இந்த புதிய மாற்றங்களை பற்றி மேலும் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் எஸ்பிஐ வங்கி ஆனது இஎம்ஐ கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது அதேபோல் தற்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகை செலுத்துவதற்கு புதிய கட்டணத்தை விதித்து இருக்கிறது. முன்னதாக இஎம்ஐ செயல்பாட்டிற்கான செயலாக்க கட்டணமாக 99 ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது மாற்றியமைக்கப்பட கட்டணத்தின்படி இஎம்ஐ செயல்பாட்டிற்கான செயலாக்க கட்டணம் 199 ஆக அதிகரித்துள்ளது மேலும் இது தவிர இதற்கான வரிகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கான செயலாக்க கட்டணம் 99 மற்றும் அதனுடன் அதற்கான வரிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட இந்த கட்டணமானது நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.