பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தகுதியான குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கான விண்ணப்பங்களை www.theni.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
இல்லையென்றால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 20-ம் தேதியே கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.