Categories
தேசிய செய்திகள்

“நவீன இந்தியாவின் அடையாளமாக மாறும்” ராமர் கோவில் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து….!!

ராம ராஜ்யத்தின் கொள்கை நவீன இந்தியாவின் அடையாளம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்தது. பூஜை நடைபெறுகின்ற இடத்திற்கு மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பூமிபூஜை தொடங்கியது. அதன்பின்னர் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியிருக்கிறார்.

இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சட்டத்திற்கு இணங்க கட்டமைக்கப்பட்டு இருந்தால், இது இந்தியாவின் சமூக நல்லிணக்க உணர்வையும் மக்களின் வைராக்கியத்தையும் வரையறுக்கும் வகையில் அமைந்துள்ளது. ராமர் கோயில் வளாகம், ராம ராஜ்யத்தின் கொள்கைகளின் அடிப்படையில் நவீன இந்தியாவின் அடையாளமாக விரைவில் மாறும்” என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |