மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்ற பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தற்போது நாடு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் நாடு திரும்பாமல் அந்நாட்டிலேயே தங்கியுள்ளார்.
இவ்வாறு இருக்க பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி கலைக்கப்பட்டு புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ள நிலையில் நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து நாடு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கையை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.