அதிதி நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் மகள் அதிதி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார். இவருக்கு முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகின்றார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் அதிதி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உடையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் அதிதி.
முதல் நாளில் கோல்டன் நிற உடையிலும் இரண்டாவது நாளில் சிகப்பு நிற உடையிலும் மூன்றாவது நாளில் நீல நிற உடையிலும் நான்காவது நாளில் தங்க நிற உடையிலும் ஐந்தாவது நாளில் பச்சை நிற உடையிலும் ஆறாவது நாளில் கிரே கலர் உடையிலும் ஏழாவது நாளில் ஆரஞ்சு கலர் உடைகளும் எட்டாவது நாளில் பச்சை நிற உடையும் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது.