Categories
தேசிய செய்திகள்

“நவராத்திரி ஸ்பெஷல்” அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுவாக வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த அகவிலைப்படி உயர்வானது கொரோனா காலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு அறிவித்தது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் அகவிலைப்படியானது 3% வரை உயர்த்தப்பட்டு 34 % இருக்கிறது.

இந்நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி 4 % வரை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் 38% அகவிலைப்படி கிடைக்கும். இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத பட்சத்தில், பிரதமர் மோடி அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |