Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழா சக்கர ஸ்நனதுடன்  நிறைவு பெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி அன்று தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது. இவ்விழா சக்கர ஸ்நனதுடன் இன்று நிறைவு பெற்றது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருக்குளத்தில் சக்கர ஸ்நனம் நடத்த அனுமதி இல்லாத நிலையில் திருகுளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலுக்குள் அமைக்கப்பட்ட தொட்டிகள் நிரப்பப்பட்டு  வேதமந்திரங்கள் முழங்க சக்கர ஸ்நனம் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி ,சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய  உற்சவர்களுக்கு திருமஞ்சனம் தீபாராதனை மற்றும் நெய்வேதியம் ஆகியவை நடைபெற்றன.

Categories

Tech |