நவராத்திரி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையம் மலர் சந்தையில் பூக்கள் விலை வழக்கத்தைவிட உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனைக்கு புகழ்பெற்றது. இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வியாபாரிகள் பூக்களை மொத்தமாக வாங்கிச் செல்வர். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துவுள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை 700 ரூபாய்க்கும் பிச்சிப்பூ 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் சம்பங்கி 300 ரூபாய், ரோஸ் 260 ரூபாய், செவ்வந்தி 200 ரூபாய், வாடாமல்லி 200 ரூபாய், மரிக்கொழுந்து 120 ரூபாய் என அனைத்து பூக்களின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.